அங் மோ கியோ வட்டாரத்தில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுச்செல்லப்பட்டனர். 57 வயது ஆடவரும் 65 வயது மாது ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங் மோ கியோ அவென்யு 5க்கும் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கும் இடைப்பட்ட சாலை சந்திப்பில் விபத்து நேற்று மாலை நடந்தது.
டிக்டாக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் கருப்பு நிறக் கார் ஒன்றின் முன்பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் காருக்கு முன் சிவப்பு நிறக் கார் ஒன்று இருப்பதும் காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
21 வயதான ஓட்டுநர் ஒருவர் விசாரணையில் உதவிவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

