அருகிவரும் கொக்கு சிங்கப்பூர் வீதியில்

அருகிவரும் கொக்கு சிங்கப்பூர் வீதியில்

1 mins read

சிங்கப்பூரில் மைனா, சிட்டுக்குருவி, காக்கா போன்ற பறவைகளைதான் பொதுவாகப் பார்க்கலாம். அருகிவரும் அரியவகை சாம்பல் கிரீட கொக்கைச் சாலையில் பார்த்ததுண்டா?

மெக்ரிட்சி அருகே ஒரு பெண் சாம்பல் கிரீட கொக்கை தூக்கிச்செல்லும் படங்களும் காணொளிகளும் அண்மையில் இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

ஓட்டுநர் ஒருவர் தமது வாகனத்தில் இருந்தவாறு இந்தக் காணெளிகளை எடுத்துள்ளார்.

அந்தப் பெண் கொக்கை ஒரு அடம்பிடிக்கும் குழந்தையைப் போல் தூக்கிச்செல்லும் காணொளி பார்க்கும்போது விசித்திரமாக இருக்கிறது.

இந்த வகை கொக்கு ஆஃப்பிரிக்காவில் பொதுவாக காணப்படுகிறது. இவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால், இவை அருகிவரும் விலங்காகக் கருதப்படுகின்றன.

இந்தப் பறவை சிங்கப்பூருக்கு எப்படி வந்தது என்பதுதான் குழப்பமாக உள்ளது. சிலேத்தாரில் உள்ள ஒரு விலங்குக் கடையிலிருந்து இது தப்பியிருக்கலாம் என்பது பலருடைய ஊகம்.