அழிந்துபோன என்ற நம்பப்பட்ட குருவி மீண்டும் காட்சியளித்தது

அழிந்துபோன என்ற நம்பப்பட்ட குருவி மீண்டும் காட்சியளித்தது

1 mins read

சிங்கப்பூரில் அழிந்துவிட்ட என்ற நம்பப்பட்ட ஒரு அரியவகை குருவி மீண்டும் இங்குத் தென்பட்டுள்ளது.

கருப்பு, சிவப்பு பிராட்பில் என அழைக்கப்படும் இக்குருவி 1980களில் சிங்கப்பூரிலிருந்து அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆசியாவில் பல பகுதிகளில் இது தொடர்ந்து காட்சியளித்து வந்தது.

-

புலாவ் உபினில் சென்ற வாரம் இக்குருவி தென்பட்டது என்ற தகவல் அறிந்த பல இயற்கை ஆர்வளல்கள் குருவியைக் காண அங்கு விரைந்தனர்.

அதன் அழகிய கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற இறகுகளோடு, அதன் நீல நிற வாய் கண்கவர் காட்சியாக அமைந்தது. அதன் வண்ணங்கள் தனித்துவமாக இருந்ததால் அது பொம்மை போன்று இருந்ததாக சிலர் கூறினர்.

-

கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் பறவை இனம் சிங்கப்பூரில் மூன்று முறை மட்டுமே தென்பட்டுள்ளது.