ஆசியான் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்தோனீசிய தலைநகருக்குச் சென்றார் பிரதமர் லீ

ஆசியான் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்க இந்தோனீசிய தலைநகருக்குச் சென்றார் பிரதமர் லீ

1 mins read

ஆசியான் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு இன்று (ஏப்ரல் 24) சென்றுள்ளார். மியன்மார் நிலவரம் குறித்து இந்தச் சந்திப்பில் தலைவர்கள் கலந்தாலோசிக்கின்றனர்.

Watch on YouTube

கடந்த ஆண்டு கொவிட்-19 சூழல் தொடங்கியதைத் தொடர்ந்து ஆசியான் தலைவர்கள் நேரடியாக சந்திப்பில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இந்தச் சந்திப்புக்கு புருணை ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
மியன்மார்