இறுதிப் பயணத்திற்கு துணை நிற்கும் அனில்

3 mins read

இறு­திச்­ச­டங்கு சேவை துறை­யில் ஓர் இளை­யர் கால்­ப­திக்க விரும்­பு­வது வழக்­கத்­திற்கு மாறான ஒன்று என்று பல­ரும் கூறு­வர். இது ஏழு வய­தில் அனில் ஷாவுக்கு ஒரு கன­வா­கத் தொடங்­கி­யது. இன்று தனது 20வது வய­தில் அனில் ஷா முழு­நே­ர­மாக, சிங்­கப்­பூர் இந்­தியர் இறு­திச்­சடங்கு சேவை நிறு­வ­னத்­தில் இயக்குநராக இருக்­கி­றார்.

தனது தொழி­லைக் கொண்டு இவரை இழி­வா­கப் பார்த்­தோர் பலர் என்று அனில் ஷா எங்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­டார். முஸ்­லி­மா­கப் பிறந்து, இப்­பொ­ழுது கிறிஸ்­த­வ­ராக மாறிய அனி­லுக்கு, இளம் வய­தில் பிற இளை­யர்­

க­ளைப் போல வெளியே செல்­ல­வும் வாழ்க்­கையை அனு­ப­விக்­க­வும் ஒரு நொடி­கூட கிடைப்­ப­தில்லை. உறக்­கத்­தில் ஆழ்ந்­தி­ருக்­கும்­போது திடீ­ரெ­னத் தொலை­பேசி அழைப்பு வந்­தால் மருத்­து­வ­ம­னைக்கு அல்­லது இறந்­த­வ­ரின் வீட்­டுக்­குச் செல்ல வேண்­டும் அனில்.

சிறு­வ­ய­தில் குடும்­பத்­தா­ரோடு ஓர் இறு­திச்­ச­டங்­கிற்­குச் சென்­றி­ருந்­த­போது, அங்கு நடை­பெற்ற இறு­திச்­ச­டங்­கு­கள் அனி­லின் கவ­னத்தை ஈர்த்­தன. அனில் இறு­திச்­ச­டங்­கு­க­ளைச் செய்­து­கொண்­டி­ருந்­த­வர்­க­ளி­டம் மேலும் தக­வல் கேட்டு அறிந்­து­கொண்­டார்.

எதிர்­கா­லத்­தில் இத்­து­றை­யில் பணி­பு­ரிய வேண்­டும் என்று தீர்­மா­னித்த அனில், 13 ஆண்­டு­களுக்­குப் பின் அதே வேட்­கை­யு­டன் இருக்­கி­றார். ஒரு நாளில் 200 கிமீ தூரம் வரை வாக­னத்தை ஓட்­டிச்­செல்­கி­றார் இவர். இறு­திச்­ச­டங்­கு­க­ளுக்­கும் மண்­டாய் தக­னச்­சா­லைக்­கும் சாம்­பல் காப்­ப­கத்­திற்­கும் செல்லும் இவர், தின­மும் நான்கு மணி நேரம் தூங்­கு­வ­து­கூட குறைவு.

தமது 'ஓ' நிலைத் தேர்வு முடி­வு­கள் வெளி­வ­ரு­வ­தற்கு முன், அனில் சிங்­கப்­பூர் இந்­தி­யர் இறு­திச்­ச­டங்கு சேவை­யு­டன் வேலைப்­ப­யிற்சி மேற்­கொள்ள விரும்பினார். இவ­ரின் ஆர்­வத்­தைப் புரிந்­து­கொண்ட அந்நிறுவனத்தார், அனி­லுக்கு வாய்ப்பளித்தனர். மாதம் $600 சம்­ப­ளத்­து­டன் இந்து சமயத்­தின் இறு­திச்­ச­டங்­கு­களை அனில் துரி­த­மா­கக் கற்­றுக்­கொண்­டார்.

நான்கு மாத வேலைப்­ப­யிற்சி, அனி­லுக்கு பல்வேறு அனு­பவங்

­க­ளைத் தந்­தது. ஒவ்­வொரு சடங்­கை­யும் முறைப்­படி தெரிந்­து­கொள்­வது, அஸ்­தி­யைக் கட­லில் கரைப்­பது, நீண்­ட­நாள் அனு­ப­வம் பெற்ற சக ஊழி­யர்­க­ளு­டன் நட்­

பு­றவை வளர்த்­துக்­கொள்­வது என அனைத்­தை­யும் ஈடு­பாட்­டு­டன் செய்­தார் அனில்.

இத்­து­றை­யில் ஆக இளைய ஊழி­ய­ராக இருக்­கும் இவர், நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் ஒத்த வயது நண்­பர்­க­ளோடு தன் நேரத்­தைச் செல­வி­டா­மல் போவதுண்டு. இத­னால் நண்­பர்­களுக்கு எரிச்­சல் உண்­டா­னா­லும் அனி­லின் விருப்­பத்தை அவர்­கள் புரிந்­து­கொள்­கி­றார்­கள்.

அனி­லின் பெற்­றோ­ரும் அவ­ரின் 13 வயது தம்­பி­யும் அனில் தொடர்ந்து தன் பணி­யில் வெற்றி­நடை போட ஊக்­க­ம­ளித்து வரு­கி­றார்­கள். உயர்­நி­லைப் பள்­ளிக்­குப் பிறகு, தற்­போது சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மின்­னி­லக்க ஊட­கத் துறை­யில் பட்­ட­யக் கல்­வியை மேற்­கொண்டு வரும் அனில், இரண்டு முறை பாடங்­களில் தேற­வில்லை.

ஆஸ்­தி­ரே­லியா அல்­லது நியூ­சி­லாந்­தில் பிண­வறை ஆராய்ச்­சித் துறை­யில் இளங்­க­லைப் பட்­டம் மேற்­கொள்­ளும் வாய்ப்பு தனக்­குக் கிட்ட வேண்­டும் என்­று விரும்­பு­கி­றார் இவர்.

படிக்­கும் காலத்­தி­லும் தன் வேலைக்கு முன்­னு­ரிமை தரும் அனில், "இந்த வேலை­யில் நான் அமைதி காண்­கி­றேன். பிறர் என்னை இழி­வா­கப் பேசி­னா­லும் அதைப் பொருட்­ப­டுத்­தா­மல் என் வேலை­யைச் சிறப்­பா­கச் செய்­வ­தில் மட்­டும் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன்," என்று கூறுகிறார்.

தன் வேலை­யில் கிடைக்­கும் புதுப்­புது அனு­ப­வங்­களை நினை­வு­கூர்ந்த அனில், இறந்த குழந்­தை­கள், சிறு­வர்­கள் ஆகி­யோ­ருக்கு இறு­திச்­ச­டங்­கு­கள் செய்­வது தன் மனதை வெகு­வாக பாதிப்பதாகக் கூறி­னார். அது­மட்­டு­மல்ல, ஒரு மாதத்­தில் கிட்­டத்­தட்ட 120 இறு­திச்­ச­டங்கு­கள் இருந்­தால், அவற்­றில் 10 முதல் 20 சடங்­கு­கள், பிள்­ளை­

க­ளால் கைவி­டப்­பட்ட வய­தா­ன­வர்­க­ளுக்­காக நடப்­பவை என எங்­க­ளி­டம் வருத்­தம் கலந்த குர­லில் தெரி­வித்­தார் அனில்.

இவர் அவ்­வப்­போது கிறிஸ்­துவ சமய இறு­திச்­ச­டங்­கு­களை­யும் செய்­துள்­ளார். சில சம­யங்­களில் இறந்­த­வ­ரின் குடும்­பத்­தி­னர் சில சடங்­கு­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கா­மல் இருப்­பது அனி­லுக்கு சவா­லாக இருந்­தா­லும், "இது அனைத்­தும் என் ஒரு­நாள் வேலை­யில் அடங்­கும்," என்று சாதா­ர­ண­மா­கக் கூறி­னார்.

"ஓர் இளை­யர், இத்­து­றை­யில் சிறந்து விளங்க முடி­யுமா என்­ப­வர்­க­ளுக்கு ஒரு முன் உதா­ர­ண­மாக அனில் திகழ்கிறார். இவ­ரின் கட்­டொ­ழுங்­கும் வேலை செய்­யும் வித­மும் நாங்­கள் பெரு­மை­ய­டை­யும் வித­மாக உள்­ளன," என்­றார் 14 ஆண்­டு­க­ளாக இந்­தத் தொழி­லில் இருக்­கும் சக ஊழி­யர் ஆனந்த் பாபு, 32.

எதிர்­கா­லத்­தில் இதே துறை­யில் சொந்த நிறு­வ­னம் ஒன்­றைத் தொடங்க விரும்­புகிறார் இந்த இளையர்.