தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடும்பை இரண்டு மணி நேரத்தில் விழுங்கிய ராஜ நாகம் (காணொளி)

1 mins read

நவீன நகரமான சிங்கப்பூரில் பாம்புகளைப் பார்ப்பதே அரிது. அதுவும் ஒரு ராஜ நாகம் ஒரு உடும்பை விழுங்கும் காட்சி என்றால் நம்புவது மாதிரி இல்லை. ஆனால் புக்கிட் தீமா இயற்கை பூங்காவில் இந்த ஆச்சரியமான காட்சி நடந்தது.

இந்தக் காட்சியை முழுமையாகப் படம் எடுத்துள்ளார் இயற்கை புகைப்படக்காரரான டேவிட் விராவான்.

-

தற்செயலாக இயற்கை பூங்காவுக்குச் சென்ற டேவிட் எதைப் படம் எடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தவர். பூங்காவில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அந்தப் பகுதியில் ஒரு ராஜ நாகம் தென்பட்டதாகக் கூறினர். பாம்பைத் தேடி சென்றபோது, இந்தக் காட்சியை அவர் கண்ணில் பட்டது.

பாம்பின் வாயில் ஏற்கனவே உடும்பு சிக்கியிருந்ததாக டேவிட் கூறினார்.

-

பாம்பு அதன் உணவை முழுமையாக விழுங்கும் வரைக்கு அதைப் படம் எடுத்தாக டேவிட் சொன்னார். அது சுமார் இரண்டு மணி நேரம் பிடித்தது.

சில கட்டங்களில் நாகம் அதன் தாடையை இன்னும் பெரிதாக்கி அதன் தலையை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கம் அசைத்து உடும்பை விழுங்கியது.

-

ராஜ நாகம் கொடிய வி‌ஷம் உடையது. பொதுவாக பாம்புகளைப் பார்த்தால், விலகி செல்லுமாறு தேசிய பூங்கா வாரியம் அறிவுறுத்தியது.

Watch on YouTube