உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே பல கார்களை மோதித் தள்ளிய லாரி

1 mins read

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியை நோக்குச் செல்லும் ஜோகூர் பாலத்தில் போக்குவரத்து விபத்து ஒன்று இன்று (ஜூலை 7)நேர்ந்துள்ளது.

விபத்தின்போது சிங்கப்பூரை நோக்கிச் செல்லும் ஜோகூர் பாலத்தில் ஒரு லாரி பல கார்களை மோதித் தள்ளியது. விபத்தில் குறைந்தது மூன்று கார்கள் பாதிக்க்கப்பட்டுள்ளன. லாரி கார்களை மோதும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Watch on YouTube

விபத்தினால் ஜோகூர் பாலத்தின் மூன்று தடங்களில் இரண்டு மூடப்பட்டன என்றும் போக்குவரத்து மெதுவடையும் என்றும் சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. அண்மைய தகவல்களுக்கு ஆணையத்டின் ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம் என்றும் ஆணையம் தெரிவித்தது.

Watch on YouTube