'ஊழியரை மிரட்டிய மாணவர் கண்டிக்கப்பட்டார்'

'ஊழியரை மிரட்டிய மாணவர் கண்டிக்கப்பட்டார்'

1 mins read

தனது ஊழி­யர் ஒரு­வரை மிரட்­டிய மாண­வ­ரைக் கண்­டித்­துள்­ள­தாக செயின்ட்ஸ் ஆண்­ட்­ரூஸ் உயர்­நிலைப் பள்ளி தெரி­வித்­துள்­ளது. மிரட்­டப்­பட்ட ஊழி­ய­ரும் அப்­பள்­ளி­யில் வேலை செய்­ப­வர்.

ஊழி­யர்­க­ளி­டம் மரி­யா­தை­யின்றி நடந்­து­கொள்­வ­தைப் பள்ளி சகித்துக்கொள்ளாது என்­றும் சம்­பந்தப்­பட்ட மாண­வர் கண்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் செயின்ட் ஆண்­டு­ரூஸ் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

"அந்த மாண­வ­ரின் பெற்­றோரை­யும் தொடர்பு கொண்­டுள்­ளோம். அவர்­க­ளு­டன் இணைந்து செயல்­பட்டு மாண­வ­ருக்கு ஆலோ­சனை வழங்கி அவரை வழி­ந­டத்­து­வோம்," என்­றும் செயின்ட் ஆண்­ட்­ரூஸ் பள்ளி கூறி­யது.

இச்­சம்­ப­வம் இடம்­பெற்ற நான்கு காட்­சி­கள் ஒன்­று­சேர்க்­கப்­பட்ட 56 விநாடி காணொளி இணை­யத்­தில் பகிரப்பட்டது. அதில் இந்த மாண­வர் ஓர் ஆட­வ­ரு­டன் வாக்­கு­வாதத்­தில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தது பதி­வா­னது.

சம்­ப­வம் வகுப்­ப­றை­யில் நடை­பெற்­ற­து­போல் தெரிந்­தது.

வாக்­கு­வா­தம் மோச­ம­டைந்த பிறகு மாண­வர் ஆட­வ­ரைத் தகாத வார்த்­தை­யா­லும் திட்டினார்.

மேலும், தகாத வாத்­தை­யைக் தன்­னி­டம் பேசக்­கூ­டாது என்று ஆசி­ரி­யர் சம்பந்தப்பட்ட மாண­வ­ரி­டம் கூறு­வ­தும் காணொ­ளி­யில் பதி­வா­னது.