சீனப் புத்தாண்டுக்காக சுவா சு காங் வட்டாரத்தில் போடப்பட்ட ஒளி அலங்காரத்தில் இன்று அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று காணப்பட்டது. சுமார் ஐந்து மீட்டர் உயரத்தில் போடப்பட்டிருந்த விளக்குகளில் மலைப்பாம்பு சுருண்டிருந்தது.
'ஏக்கர்ஸ்' எனும் விலங்கு நல ஆய்வு, கல்வி சமுதாய அமைப்பு மலைப்பாம்பை பத்திரமாக மீட்டது. அதற்கு உடமில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அமைப்பின் துணை தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் தெரிவித்தார்.
மலைப்பாம்பை மீட்டெடுக்கும் காட்சிகள் டிக்டாக் தளத்தில் காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மலைப்பாம்பின் நீளம் சுமார் 2.5 மீட்டர் என்று குறிப்பிடப்பட்டது.
கூட்டத்திலிருந்து விலக பாம்பு கம்பத்தின் மீது ஏறியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

