காட்டுப் பகுதியில் சம்பவம்; மாது மரணம்

1 mins read

அப்பர் புக்கிட் தீமா சாலையோரமாக உள்ள காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (டிசம்பர் 19) 48 வயது மாது ஒருவர் பேச்சு மூச்சின்றி கிடந்தார் என்று காவல்துறை தெரிவித்தது.

அந்த மாது மீது கான்கிரீட் பகுதி ஒன்று விழுந்ததாக நம்பப்படுகிறது.

இயற்கைக்கு மாறான மரணம் பற்றிய தகவல் காவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் கிடைத்தது.

சுயநினைவற்ற நிலையில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அந்த மாது கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவ ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

மரணமடைந்தவர், நான்கு பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி மெலிட்டா டோலா என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

திருவாட்டி மெலிட்டா மலை ஏறுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.

அரசாங்க நிலத்தில் குறிக்கப்படாத பாதைகளில் செல்வோர் கவனமாக இருக்குமாறு சிங்கப்பூர் நில ஆணையம் கடந்த ஏப்ரலில் அறிவுறுத்தி இருந்தது.

-