(காணொளி) பினாங்கு ரோடு அலுவலகக் கட்டடத்தைக் கடந்து சென்ற நீர்நாய்க் கூட்டம்; வியப்பில் ஆழ்ந்த பணியாளர்கள்

(காணொளி) பினாங்கு ரோடு அலுவலகக் கட்டடத்தைக் கடந்து சென்ற நீர்நாய்க் கூட்டம்; வியப்பில் ஆழ்ந்த பணியாளர்கள்

1 mins read

சிங்கப்பூரில் நீர்நாய்கள் மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படுவதும் மக்கள் அதைக் கொண்டாடுவதும் அடிக்கடி நிகழும் சம்பவங்கள்.

கூட்டமாக 13 நீர்நாய்கள் நேற்று எண் 9 பினாங்கு ரோட்டில் உள்ள அலுவலகக் கட்டடம் வழியாக ஃபோர்ட் கேனிங் பூங்காவை நோக்கிச் சென்றது அந்தப் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Watch on YouTube

பெரிய நீர்நாய் ஒன்று முன்னால் செல்ல, மற்ற அனைத்து நீர்நாய்களும் பின்தொடர்ந்து 24 மணி நேர இணைப்பு வழியக ஃபோர்ட் கேனிங் பூங்காவுக்குள் சென்றன.

வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் நீர்நாய்கள் நகரச் சூழலில் சாதாரணமாக நடமாடுவதாக அனைத்துலக அளவில் நீர்நாய் நிபுணரான திரு நிக்கோல் டூப்லெய்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.