நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்கு அருகே பைனியர் நார்த் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜனவரி 15) ஒரு மோட்டார்சைக்கிளும் ஒரு காரும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமுற்றனர்.
22 வயது மோட்டார்ச்சைக்கிளோட்டியும் அவருடன் சேர்ந்து பயணம் செய்த 39 வயது ஆடவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் பைனியர் ரோடு நார்த் சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து இரவு 8.40 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இரு ஆடவர்களும் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது. தீவு விரைவுச்சாலையை நோக்கி வலப்புறம் திரும்பவிருந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டி எதிர்த்திசையில் வந்த காருடன் மோதி தூக்கி வீசப்படுவதைக் காணொளி காட்டியது.
இந்தச் சாலைச் சந்திப்பு ஆபத்தானது என இணையவாசிகள் சிலர் கூறினர்.

