கேலாங்கில் சோதனை நடவடிக்கையில் 37 பேர் சிக்கினர்

கேலாங்கில் சோதனை நடவடிக்கையில் 37 பேர் சிக்கினர்

1 mins read

கேலாங் வட்டாரத்தில் நடந்த சோதனையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட 37 பேர் பிடிப்பட்டனர்.

காவல் துறையுடன் இணைந்து மற்ற அரசாங்க அமைப்புகளும் சோதனைகளை மேற்கொண்டனர். மார்ச் 28 முதல் ஏப்ரல் ஒன்று வரை அதிரடி நடவடிக்கை நடந்தது.

24லிருந்து 79 வயது வரை இடைப்பட்ட 26 ஆண்களும் 11 பெண்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சட்டவிரோத அமைப்புகளில் உறுப்பினர்கள் என் சந்தேகத்தின் பெரில் இரண்டு ஆண்கள் கைதாகினர்.

ஒரு 54 வயது ஆடவர் போதைப் பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்.

நால்வரிடமிருந்து தடைசெய்யப்பட்ட மருத்துவப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூதாட்டட நடவடிக்கையில் ஈடுப்பட்ட 21 நபர்களும் சோதனை நடவடிக்கையில் சிக்கினர்.

-

இரண்டு உடல் பிடித்துவிடும் நிலையங்களில் பாலியல் சேவைகள் வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் கைதாகினர்.

-

பழைய பொருள்களை உரிமம் இல்லாமால் விற்ற இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வரி செலுத்தாத சிகரெட்கள் வைத்திருந்த ஐந்து நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

பிடிப்பட்ட 37 பேரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.