சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் அமைந்துள்ள தரும முனீஸ்வரன் ஆலயம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) தொடங்கி ஒருவாரத்திற்கு மூடப்படுகிறது.
ஆலய வளாகத்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருதி ஆலயம் ஒருவாரத்திற்கு மூடப்படுவதாக ஆலய நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இது தொடர்பில் "பக்தர்களின் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்," என்று அது கூறியது.
முன்னதாக, ஸ்ரீ சிவன் கோயிலிலும் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலிலும் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது.
அதையடுத்து, ஸ்ரீ சிவன் கோயில் பிப்ரவரி 14ஆம் தேதிவரை மூடப்பட்டிருந்தது. குறைவான அன்றாடச் சேவைகளோடு ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் செயல்பட்டு வந்தது.
-

