சிங்கப்பூரில் கடலில் மடிந்துகிடந்த சுறாக்கள்

சிங்கப்பூரில் கடலில் மடிந்துகிடந்த சுறாக்கள்

1 mins read

சிங்கப்பூரின் பூலாவ் ஹந்துக்கு அருகே குறைந்தது எட்டு இளம் சுறாக்கள் மடிந்து காணப்பட்டன. இவை 'பிளாக்டிப் பாறை' சுறா வகையை சேர்ந்தவை.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒன்று நேற்று (ஆகஸ்ட் 28) அன்று அந்தப் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, சுறாக்களை கண்டுபிடித்தது. அவை கடலில் 10 மீட்டர் ஆழத்தில் இருந்தன. அவற்றின் அழுகிய நிலையை கொண்டு, அவை ஒரு நாள் முன்புதான் மடிந்திருக்ககூடும் என நம்பப்படுகிறது. மாண்ட சுறாக்கள் அனைத்துக்கும் செவுள் பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. சுறாக்கள் ஒரு வலையில் சிக்கியிருக்கக்கூடும் என்று குழு சந்தேகிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் தேசிய பூங்கா வாரியத்துடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

-

பிளாக்டிப் பாறை சுறா சிங்கப்பூரில் நீரில் இயற்கையாகவே உள்ளன. அவை 1.6 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. மீன்பிடித்தல், பவளப்பாறைகளின் அழிவு ஆகிய காரணங்களால் இந்த வகை சுறாக்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.