சிங்கப்பூரில் டென்னிஸ் வீராங்கனை: கூடியது ரசிகர் பட்டாளம்

சிங்கப்பூரில் டென்னிஸ் வீராங்கனை: கூடியது ரசிகர் பட்டாளம்

1 mins read

அமெரிக்க பொது விருது போட்டியில் வென்ற இளம் டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு சிங்கப்பூர் வந்துள்ளார். தங்ளின் கிளப்பில் பயிற்சியில் ஈடுபட்ட அவரை நேரில் காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் அங்கு இன்று புதன்கிழமை (ஜனவரி 26) ஒன்றுகூடினர்.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய பொது விருது போட்டியிலிருந்து வெளியேறிய அவர், ஒருவாரத்திற்கு சிங்கப்பூரில் தங்குவதாக அறியப்படுகிறது.

-

பிரிட்டிஷ் நாட்டவரான 19 வயது ராடுகானுவை காண, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது 30க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடினர்.

Watch on YouTube

டென்னிஸ் அரங்கத்திற்குமேல் உள்ள மேல்மாடத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 பேர் பார்த்தனர். அவர்களில் சிலர் அதிநவீன புகைப்படக் கருவிகளை வைத்திருந்தனர்.

பயிற்சி ஆட்டம் நண்பகல்வாக்கில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கார் நிறுத்துமிடத்தில் காத்துக்கொண்டிருந்த வேனுக்கு ராடுகானு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடைய பயிற்றுவிப்பாளரும் உடனிருந்தார்.

அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்றாலும், வேன் அங்கிருந்து புறப்பட்டபோது ரசிகர்களிடம் புன்னகையுடன் கையசைத்தார் ராடுகானு.

சிங்கப்பூர் பயணத்திற்கு அடுத்ததாக ராடுகானு துபாய்க்குப் புறப்படுவார் எனக் கூறப்படுகிறது.

Watch on YouTube