சிங்கப்பூர் இராணுவ வீரர்களுக்குப் பரிமாறப்பட்ட தாவர பர்கர்

சிங்கப்பூர் இராணுவ வீரர்களுக்குப் பரிமாறப்பட்ட தாவர பர்கர்

1 mins read

பூமி தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர் இராணுவ வீரர்களுக்கு தாவரத்தால் செய்யப்பட்ட பர்கர்கள் பரிமாறப்பட்டன. இராணுவ முகாம்களில் நீடித்த நிலைத்தன்மையான உணவு முறையைக் கடைபிடிக்கும் ஒரு அம்சமாக சைவ பர்கர்கள் வழங்கப்பட்டன.

தாவர பர்கரில் உள்ள மாமிசம் போன்ற துண்டு சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டதாக சிங்கப்பூர் இராணுவம் தெரிவித்தது. அது முழுக்கமுழுக்க சோயா மற்றும் பட்டாணியிலிருந்து தருவிக்கப்பட்ட புரதச்சத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இதில் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதோடு உடல்நலத்துக்கும் சிறந்தது எனக் கூறப்பட்டது.

-

நீடித்த நிலைத்தன்மையான உணவு முறையைக் கடைபிடிக்க இராணுவ முகாம்களில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. உணவை மறுசுழற்சி செய்வது, தேவையான அளவு உணவை மட்டும் எடுத்துக்கொள்வது போன்றவை அவற்றில் அடங்கும்.

பூமி தினம் ஏப்ரல் 22ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.