சிங்கப்பூர் போலிஸ் படைக்கு புதிய கேமராக்கள், ஆளில்லா வானூர்திகள், துப்பாக்கிகள், பயிற்சி எந்திரங்கள்

சிங்கப்பூர் போலிஸ் படைக்கு புதிய கேமராக்கள், ஆளில்லா வானூர்திகள், துப்பாக்கிகள், பயிற்சி எந்திரங்கள்

1 mins read

முன்களக் காவல் பணி, காவலர் பயிற்சி, கண்காணிப்பு, சமூகத்தைச் சென்றடைதல் போன்ற பல்வேறு அம்சங்களில் உதவ மேலும் அதிகமான போலிஸ் கேமராக்கள், ஆளில்லா வானூர்திகள், பயிற்சி எந்திரங்கள் எனத் தொழில்நுட்ப ரீதியாக சிங்கப்பூர் போலிஸ் படை வலுப்பெறவுள்ளது.

இன்று (ஜூன் 22) நடைபெற்ற வருடாந்திர போலிஸ் பணித்திட்டக் கருத்தரங்கில் இது அறிவிக்கப்பட்டது.

-

போலிஸ் கேமராக்கள் 90,000க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே பொருத்தப்பட்டுவிட்டதாகவும் அவற்றின் உதவியுடன் 5,000க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் கூறப்பட்டது.

புதிய பொது வீடமைப்பு புளோக்குகள், உணவங்காடி நிலையங்கள், போக்குவரத்துப் பாதைகள் ஆகியவற்றில் மேலும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நகர, அக்கம்பக்க வட்டாரங்களில் பொருத்தப்படும் கேமராக்கள், காணொளிப் பகுப்பாய்வு ஆற்றலுடையதாக இருக்கும். எதிர்பாராத கூட்டம், நடத்தையில் வன்முறை போன்றவற்றை உடனே கண்டறியும் திறனை இக்கேமராக்கள் பெற்றிருக்கும்.

-

அதிகரிக்கப்படும் ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்காணிப்பு, ரோந்துப் பணி, சம்பவங்களைத் தொலைவிலிருந்து காணுதல் போன்றவற்றுக்குப் பயனாகும்.

புதிய துப்பாக்கிகள், உடலில் அணியக்கூடிய கேமராக்கள் ஆகியவற்றையும் போலிஸ் அதிகாரிகள் பெறவுள்ளனர்.