சிறுநீர், தொழிற்துறைக் கழிவிலிருந்து சிமென்ட் தயாரிப்பு

சிறுநீர், தொழிற்துறைக் கழிவிலிருந்து சிமென்ட் தயாரிப்பு

1 mins read

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சிறுநீரையும் தொழில்துறைக் கழிவுகளையும் மறுபயனீடு செய்யக்கூடிய சிமென்ட்டாக மாற்றியுள்ளனர்.

சிறுநீரையும் தொழில்துறைக் கழிவுகளையும் அமிலம், நுண்ணுயிரிகள் ஆகியவற்றுடன் கலக்கும்போது இந்த புதுவித, சிமென்ட் தயாரிக்கப்ப்படுகிறது.

வழக்கமான சிமென்டை மண்ணுடன் கலக்கும்போது இருக்கும் உறுதியை விட இந்த சிமென்டை மண்ணுடன் கலக்கும்போது உறுதி அதிகம்.

இந்த மறுபயனீடு செய்யக்கூடிய சிமென்ட்டை சில வகை கட்டுமானத் திட்டங்களில் பயன்படுத்தலாம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கூறியது.

கடற்கரையில் மணல் அரிப்பைக் குறைப்பது, பாலைவனத்தில் நீர்த்தேக்கங்களை அமைப்பது போன்றவை அவற்றில் அடங்கும்.

விரிசல்களை சரிசெய்யக்கூட இந்த சிமென்டைப் பயன்படுத்தலாம்.

-

இந்த வகை சிமென்டை தயாரிக்க தேவைப்படும் சிறுநீரையும் தொழில்துறைக் கழிவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் மறுபயனீடு செய்யக்கூடிய சிமென்ட்டை உற்பத்தி செய்ய சாதாரண வெப்பநிலை போதுமானது என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று ஆய்வாளரகள் கூறினர்.