தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செந்தோசா, மரினா பேயில் 2024க்குள் பறக்கும் டாக்சி சேவை

1 mins read

சிங்கப்பூரில் இன்னும் ஈராண்டுகளில் வணிக ரீதியில் பறக்கும் டாக்சி சேவைகள் தொடங்கப்படவிருக்கின்றன. செந்தோசாவிலும் மரினா பேயிலும் பறக்கும் டாக்சி சேவைகள் அடிக்கடி இடம்பெறும்.

பறக்கும் டாக்சி துறையில் முன்னோடி நிறுவனங்களான 'வோலோகாப்டர்', 'ஸ்கைபோர்ட்ஸ்' இச்சேவைகளைத் தொடங்கவிருக்கின்றன.

பின்னர் மலேசியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இச்சேவைகள் விரிவுபடுத்தப்படும். சிலேத்தார் மற்றும் சாங்கியில் உள்ள முனையங்களில் இருந்து புறப்பட்டு மலாக்கா, பாத்தாம், பிந்தான் உள்ளிட்ட நகர்களுக்கும் தீவுகளுக்கும் பறக்கும் டாக்சிகள் செல்லக்கூடும்.

சாங்கி விமான நிலையத்தில் இருந்து பாத்தாம் தீவுக்கு பறக்கும் டாக்சியில் 20 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம் என்று ஜெர்மானிய நிறுவனமான வோலோகாப்டர் கூறியது.

ஜோகூர் பாருவில் உள்ள இப்ராஹிம் அனைத்துலக வர்த்தக வட்டாரத்திற்கு அரை மணி நேரத்தில் செல்லலாம். ஒப்புநோக்க, கார் பயணம் மூன்று மணி நேரம் எடுக்கும்.

பறக்கும் டாக்சி தொழில்நுட்பப் பயன்பாடு வணிகமயமாகும் நிலையை இப்போது நெருங்கிவிட்டதாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் பறக்கும் டாக்சி நிறுவனங்கள் கூறின.

-