சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் : அமைச்சர் சண்முகம்

சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் : அமைச்சர் சண்முகம்

1 mins read

ரிவர் வேலி ஹை பள்ளியில் 13 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்பில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், "இந்தச் சம்பவம் பெற்றோர்களுக்கு ஆக மோசமான சம்பவங்களில் ஒன்று," என்று தெரிவித்தார்.

"வழக்கமாக சிங்கப்பூர் என்றுமே பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதப்படுவதால் இந்தத் தாக்குதல் முற்றிலும் அதிர்ச்சிக்குரியது. தாக்குதலை செய்தவரும் இளளையர். அவர் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தலைமைச்சட்ட அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தது போல மனநல பிரச்சினைகள் இந்த இளையருக்கு ஏற்கெனவே இருந்தது," என்று அவர் கூறினார்.

அந்த இளையருக்குக் கோடாரி எப்படி கிடைத்தது என்ற கேள்விகளுக்கும் அவர் பதிலாளித்தார். "அந்தக் கோடாரியை அவர் இணையம் மூலம் வாங்கியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறுகின்றன. ஆனால் விசாரணை முடிந்த பிறகுதான் நமக்கு முழு விவரங்கள் தெரிய வரும்," என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.

"கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோருடன் நாம் அனைவரும் துயரமடைகிறோம். சொல்லொணாத் துயரம் அது," என்று அவர் கூறினார்.

கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இளையர் நேற்று கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.