தாயுள்­ளம் நிறைந்த கமலா

தாயுள்­ளம் நிறைந்த கமலா

2 mins read

இல்­லப் பணிப்­பெண்­ணாக வேலை செய்து வரு­கி­றார் கமலா ராஜேந்­தி­ரன், 45.

இவர் கடந்த பத்து மாதங்­க­ளாக மாதத்­திற்கு ஒரு முறை தன் கையால் சமைத்த உண­வினை கஃப் சாலை­யில் காத்­தி­ருக்­கும் ஊழி­யர்களுக்கு வழங்கி வரு­கி­றார்.

சிறு­வ­ய­தில் தந்­தையை இழந்து வறு­மை­யில் வாடிய கம­லா­விற்கு 18 வய­தில் திரு­ம­ண­மாகி, மூன்று பிள்­ளை­க­ளுக்கு தாயா­னார்.

துபாய் சென்ற இவ­ரின் கண­வர் உயிரை மாய்த்­துக்­கொண்­டார் என்ற செய்­தி­யைக் கேட்டு கலங்­கிப்­போ­னார்.

இனி பிள்­ளை­க­ளுக்கு தான்­தான் வழி­காட்­ட­வேண்­டும் என்ற முடி­வு­டன் சிங்­கப்­பூ­ருக்கு பணிப்­பெண்­ணாக தன்­னு­டைய பய­ணத்­தைத் தொடர்ந்­தார்.

11 ஆண்­டு­கள் பணிப்­பெண்­ணாக வேலை செய்து மாதம் 550 வெள்ளி சம்­ப­ளத்தை தனக்­கென ஒதுக்­கிக்­கொள்­ளா­மல் பிள்­ளை­க­ளுக்கு முழு­மை­யாக அனுப்­பத் தொடங்­கி­னார்.

தமி­ழ­கத்­திலிருந்து வந்து இங்கு கட்­டட வேலை செய்­யும் பலர் வீட்­டில் சமைக்­கும் உண­வுக்கு ஏங்­கு­வதை அறிந்­தார்.

-

கடந்த பத்து மாதங்­க­ளாக வீட்டு உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யோடு தனது விடு­முறை நாளில் உணவு சமைத்து, அதைப் பொட்­ட­லம் போட்டு, பீச் ரோடில் இருந்து லிட்­டில் இந்­தியா வரை அந்த உண­வுப் பொட்­ட­லங்­களை தள்­ளு­வண்­டி­யில் வைத்து நடந்தே தள்­ளிக்­கொண்டு செல்­கி­றார். காலை தொடங்கி மாலை வரை வழி­யில் தென்­படும் ஊழி­யர்­க­ளுக்கு கொடுத்து வரு­கி­றார்.

அவர் எப்­போ­தும் வெள்ளை உடை­யு­டன் இருப்­ப­தால் பலர் அவ­ரைச் சந்­தே­கத்­து­டன் பார்த்­த­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார். யார் என்ன நினைத்­தா­லும் தன்­னு­டைய இந்­தச் சேவையை தொடர உறுதி பூண்­டி­ருக்­கி­றார் கமலா ராஜேந்­தி­ரன்.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தங்குவிடுதி ஊழியர்களின் தற்போதைய வாழ்க்கைமுறையை சித்திரிக்கும் சிறப்புக் காணொளியைப் பார்க்க 'கியூஆர்' குறியீட்டை வருடவும்.