தெம்பனிஸ் காப்பிக்கடையில் தீ; தப்பி ஓடிய ஊழியர்கள்

தெம்பனிஸ் காப்பிக்கடையில் தீ; தப்பி ஓடிய ஊழியர்கள்

1 mins read

தெம்பனிஸ் வட்டாரத்தில் 15 உணவுக்கடைகளைக் கொண்ட காப்பிக்கடை ஒன்று இன்று (ஆகஸ்ட் 7) தீக்கு இரையானது.

தெம்பனிஸ் ஸ்திரீட் 81 புளோக் 823Aல் உள்ள அந்தக் காப்பிக்கடை தீப்பிடித்துக்கொண்ட சில நிமிடங்களிலேயே முற்றிலும் அழிந்தது.

Watch on YouTube

காப்பிக்கடையில் இருந்த மீன் சூப் கடையில் முதலில் தீப்பிடித்துக் கொண்டதாக நம்பப்படுகிறது.

"மீன் சூப் கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் உடனடியாக கடையைவிட்டு வெளியே ஓடினார். நானும் என்னுடன் வேலை பார்க்கும் மற்றொருவரும் தீயை அணைக்க முயற்சி செய்தோம்.

"ஆனால் தீயின்மீது தண்ணீர் பட்டதும் அது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காப்பிக்கடை முழுவதும் தீ பரவியது. புகை வெளியேறும் குழாய்க்குத் தீ பரவியதும் தப்பி ஓடுமாறு அனைவரிடமும் கத்தினேன். நாங்கள் தப்பி ஓடியபோது எங்களுக்கு மேல் இருந்த புகை வெளியேறும் குழாய்கள் வெடித்தன," என்று காப்பிக்கடையில் இருந்த கடை ஒன்றின் ஊழியரான 50 வயது திரு டான் யோங் செங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என நம்பப்படுகிறது. தீச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்