தைவான் வாகன விபத்தில் மூன்று சிங்கப்பூரர்களுக்குக் காயம்

தைவான் வாகன விபத்தில் மூன்று சிங்கப்பூரர்களுக்குக் காயம்

1 mins read

தைப்பே: தைவானில் நிகழ்ந்த வாகன விபத்தில் மூன்று சிங்கப்பூரர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு கிழக்கு தைவானில் நிகழ்ந்தது.

தைத்துங் பகுதியில் காரும் வேனும் மோதிக்கொண்டதால் விபத்து நேர்ந்தது.

பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களில் ஒருவர் மோசமான காயங்களுக்கு ஆளானார்.

அவசர சிகிச்சைக்காக லிம் எனும் குடும்பப் பெயரைக் கொண்ட அவர் தைத்துங் மக்காய் நினைவாலய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

லேசான காயங்கள் ஏற்பட்ட மற்ற இரு சிங்கப்பூரர்கள் தைத்துங் கிறிஸ்துவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களின் குடும்பப் பெயர்கள் டான், லிம்.

மற்ற இரு தைவானியர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Watch on YouTube