நாடளாவிய சோதனை: போதைப்பொருள் சந்தேகப் பேர்வழிகள் 81 பேர் பிடிபட்டனர்

நாடளாவிய சோதனை: போதைப்பொருள் சந்தேகப் பேர்வழிகள் 81 பேர் பிடிபட்டனர்

1 mins read
da894a46-2361-476e-bc9c-68e34ab9406f
அதிகாரிகள் நடத்திய சோதனைகளில்   81 பேர் பிடிபட்டனர். - படம்: போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நாடு முழுவதும் நடத்திய ஐந்து நாள் சோதனைகளில் 81 சந்தேக நபர்கள் கைதாயினர். $60,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள்கள் பிடிபட்டன.

புக்கிட் பாத்தோக், ஹவ்காங், தெம்பனிஸ், ஈசூன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனைகளை நடத்தியதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் 579 கிராம் ஹெராயின், 100 கிராம் ஐஸ், 76 கிராம் கஞ்சா, 52 எக்டசி மாத்திரைகள், ஆறு எரிமின் மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.

அதிகாரிகள், கடந்த செவ்வாய்க்கிழமை தெம்பனிஸ் ஸ்திரீட் 43ல் வீடு ஒன்றில் 61 வயது ஆடவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப் பொருள்களும் $4,786.20 பணமும் கைப்பற்றப்பட்டன.

போதைப்பொருளைப் புழங்கும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரிகள் சென்றபோது அந்த ஆடவர் கதவைத் திறக்க மறுத்துவிட்டார்.

அதனால் அதிகாரிகள் பலவந்தமாக உள்ளே செல்ல வேண்டியதாயிற்று.

குறிப்புச் சொற்கள்