பள்ளியில் தாய்மொழி வார விழா

பள்ளியில் தாய்மொழி வார விழா

1 mins read

செயிண்ட் பேட்­ரிக்ஸ் பள்­ளி­யில் தாய்­மொழி வார விழா­வின் ஓர் அங்­க­மாக இம்­மா­தம் 8ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை, "வாசிக்க வா" என்ற வாசிப்­புப் பட்­டறை உயர்­நிலை ஒன்று முதல் மூன்­றாம் வகுப்பு மாண­வர்­களுக்கு நடத்­தப்­பெற்­றது.

வாசிப்­பின் முக்­கி­யத்­து­வம், வாசிப்­பின் வகை­கள், வாசிப்­பின் நன்­மை­கள், வாசிப்பு அனு­ப­வம், ஏற்ற இறக்­கத்­து­டன் வாசிப்­பது போன்­ற­வற்­றைப் புது­மை­யா­க­வும் காணொ­ளி­கள், புதிர்ப் போட்­டி­கள், நடிப்பு ஆகி­ய­வற்­றின் மூல­மும் மகிழ்­வூட்­டும் வகை­யி­லும் எழுத்­தா­ளர், நடி­கர், இயக்­கு­ந­ரு­மான திரு மில்லத் அக­மது சிறப்­பாக வழி நடத்­தி­னார்.

பள்­ளி­யின் தமி­ழா­சி­ரி­யர் மா அர்ச்­சு­னன், இது­போன்ற வாசிப்பு நிகழ்ச்­சி­க­ளின் மூலம் மாண­வர்­க­ளி­டம் வாசிப்­புப் பழக்­கத்தை ஊக்கு­விக்க முடி­யும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

ஐம்­பது மாண­வர்­கள் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்ச்­சி­யில் புதிர்ப்­போட்­டி­யில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்­கும், கலந்­து­கொண்ட அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் உயிர்­மெய் பதிப்­ப­கம் சார்­பாக 'குவிக் மேத்ஸ்' என்ற நூல் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டது.