பாதுகாப்பின்றி லாரியில் ஊழியர்கள் பயணம் (காணொளி உள்ளே)

1 mins read

இன்று காலை பாதுகாப்பு இல்லாமல் லாரியின் பின்புறம் பயணித்த சில ஆடவர்களின் காணொளி ஒன்றை தமிழ் முரசு வாசகர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

'கரணம் தப்பினால் மரணம்' எனும் நிலையில் அந்த இருவரும் லாரியில் பயணித்தது காணொளியில் தெரிந்தது.

கொவிட்-19 தொடங்கியது முதல் ஊழியர்களின் நலனுக்கான வசதிகள் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பின. அவ்வரிசையில் ஊழியர்களின் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த சர்ச்சையும் அண்மையில் நிலவி வந்தது. இப்பிரச்சினை பற்றிய விவாதம் நாடளுமன்றத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி இடம்பெற்றது.

இந்நிலையில் இன்று (திங்கள்) காலை மணி 11.25 அளவில் வெள்ளை நிற 'நிசான்' லாரி ஒன்றில் இரண்டு ஆடவர்கள் லாரியின் பின் பகுதியில் பாதுகாப்பு வசதி எதுவும் இல்லாமல் உட்கார்ந்து சென்றுள்ளனர்.

அந்த ஆடவர்கள் அந்த நிறுவனத்தின் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்றும் காணொளியை அனுப்பிய முரசு வாசகர் கூறினார்.

ஊட்ரம் பார்க் நோக்கி செல்லும் 'சிடிஇ' சுரங்கப்பாதையில் இருந்தபோது திறன்பேசியில் இந்த காணொளியைப் பதிவு செய்தார் கட்டுமானத் துறை ஊழியர் திரு பிரம்மதேவன் செல்லையா,33.