பாலித் தீவில் ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ கலந்துகொள்கிறார்

பாலித் தீவில் ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ கலந்துகொள்கிறார்

1 mins read
Google News Preferred Icon

ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று பிரதமர் லீ சியன் லூங் இந்தோனீசியாவின் பாலித் தீவிற்குச் செல்கிறார். ஜி20 தலைமைப் பொறுப்பை இவ்வாண்டு இந்தோனீசியா ஏற்றுள்ள நிலையில் அதிபர் ஜோக்கோ விடோடோவின் அழைப்பை ஏற்று பிரதமர் கலந்துகொள்கிறார். உணவு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், மின்னிலக்க உருமாற்றம் ஆகிய அம்சங்கள் குறித்த கலந்துரையாடல்களில் பிரதமர் லீ பங்கெடுப்பார். மற்ற தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பகளையும் அவர் நடத்தவுள்ளார். 'ஒன்றிணைந்து மீள்வோம், வலுவாக மீள்வோம்' எனும் கருப்பொருளில் நோய்ப் பரவலுக்குப் பிந்தைய உலகளாவிய மீட்சியை வலுவாகவும் மேம்பட்ட மீள்திறனுடனும் செயல்படுத்து குறித்து உச்சநிலை மாநாட்டில் கலந்துரையாடப்படும். சவால்மிக்க அரசியல், பொருளியல் சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் லீயுடன் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, நிதி அமைச்சின் மூத்த அதிகாரிகள் உடன் செல்கின்றனர். அவர் 16ஆம் தேதி வரை பாலியில் இருப்பார்.

அதுவரை இடைக்காலப் பிரதமராக மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியென் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.