தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புளோக்கின் கீழ்த்தளத்தில் அசத்தும் தீபாவளி அலங்காரம்

1 mins read

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் வசித்துவரும் இந்தியக் குடும்பம் ஒன்று தீபாவளி குதூகலத்தை தனது அண்டைவீட்டாருடன் பகிர்ந்துகொண்டுவருகிறது.

தீபாவளியை முன்னிட்டு இந்தக் குடும்பம் அதன் வீட்டு வாசலையும் சுற்றுவட்டாரத்தையும் அலங்கரித்துள்ளது. செயற்கை சாமந்தி பூக்கள், மலர்மாலைகள், மஞ்சள், சிவப்பு நிற துணிகள், பதாகை ஆகியவற்றை பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலங்காரங்களைக் கொண்டு சிறிய கூடம் போன்ற உணர்வையும் குடும்பம் ஏற்படுத்தியுள்ளது.

-

அலங்காரங்கள் தீபாவளிக்கு மட்டுமல்ல. நோன்புப் பெருநாள், கிறிஸ்துமல், சீனப் புத்தாண்டு ஆகிய விழாக்களுக்கும் புளோக் அலங்கரிக்கப்படுகிறது.

-

இந்தக் குதூகல உணர்வுக்கு பின்னணியில் ராஜ், அர்ஜான் ஆகிய இருவரும் உள்ளனர்.

ஆண்டுதோறும் அவர்கள் கைவண்ணத்தில் உருவாகும் அலங்காரத்தைக் காண புளோக் குடியிருப்பாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.