பெண்கள் பிரச்சினைகளை ஆராய இரு புதிய குழுக்கள்

பெண்கள் பிரச்சினைகளை ஆராய இரு புதிய குழுக்கள்

2 mins read

சிங்­கப்­பூர் பெண்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­களை சிறந்த முறை­யில் கவ­னித்து உதவ மக்­கள் செயல் கட்­சி­யின் மக­ளிர் பிரிவு புதி­தாக இரு குழுக்­களை ஏற்­ப­டுத்த உள்­ளது. பெண்­கள் பிரச்­சி­னை­கள் தொடர்­பான ஆய்­வுப் பணி­க­ளை­யும் கொள்கை விவ­கா­ரங்­க­ளை­யும் அந்­தக் குழுக்­கள் முன்­னின்று கவ­னித்து உத­வும் என்று மனி­த­வள அமைச்­சர் ஜோசஃபின் டியோ கூறியுள்­ளார்.

ஆய்­வுக்­குழு, பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் திருவாட்டி இயோ வான் லிங் தலை­மை­யில் செயல்­படும். புதி­தாக உரு­வெ­டுத்­தி­ருக்­கும் நில­ வ­ரங்­களை அக்­குழு ஆரா­யும். குறிப்­பாக, வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது, பெண்­க­ளி­டத்­தில் அது ஏற்­ப­டுத்­தும் தாக்­கம் போன்­றவை அத­னுள் அடங்­கும் என்­றார் மசெக மக­ளிர் பிரிவு தலை­வி­யு­மான திரு­வாட்டி டியோ.

உதா­ர­ணத்­திற்கு, இல்­லப் பரா­ம­ரிப்­பில் முக்­கிய பங்கு வகிக்­கும் பெண்­க­ளுக்கு வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது எவ்­வாறு உத­வும், அத்துடன் முன்­னேற்­றம் ஏற்ப­டும்­போது ஓரங்­கட்­டப்­ப­டா­மல் இந்தப் புதிய வேலை முறை தடுக்­குமா என்­பன போன்ற வினாக்­கள் உள்­ள­தாக அவர் கூறினார். அனைத்­து­லக மக­ளிர் தினம் நாளை (மார்ச் 8) கடைப்­பி­டிக்­கப்­பட உள்ள வேளை­யில் பொங்­கோ­லில் நேற்று அது தொடர்­பாக நடத்­தப்­பட்ட நிகழ்வு ஒன்­றில் பங்­கேற்­று திருவாட்டி டியோ பேசி­னார். முக்­கிய நடப்­பு­கள் குறித்து பெண்­கள் கொண்டிருக்கும் எண்ணங்களை கூர்­மைப்­ப­டுத்­தும் முயற்­சி­யி­லும் இக்­குழு ஈடு­படும்.

-

தொடக்­க­நிலை 1க்கான பதிவு, நாடா­ளு­மன்­றத்­தில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்த புதிய தண்­ட­னை கட்­ட­மைப்பு உள்­ளிட்ட கவ­னத்தை ஈர்க்­கும் அம்­சங்­க­ள் மீதான விழிப்புணர்வு அவற்­றில் அடங்­கும் என்­றார் அவர்.

மூன்று வகை­யான பாலி­யல் குற்­றங்­க­ளுக்­கான அதி­க­பட்ச தண்­டனை அதி­க­ரிக்­கப்­பட இருப்­ பதாக திரு சண்­மு­கம் கூறி இருந்­தார். இக்­குற்­றங்­க­ளுக்­கான தண்­டனை விவ­ரங்­கள் மறு­ஆய்வு செய்­யப்­பட்­ட­தன் தொடர்ச்­சி­யாக அவ­ரின் இந்த அறி­விப்பு வெளி­யா­னது. பல்­வேறு வழக்­கு­களில் விதிக்­கப்­ப­டக் கூடிய தண்­டனை போது­மா­ன­தாக இல்லை என்­பது பற்றி கடந்த ஆண்டு ஜூலை­யில் மசெக மக­ளிர் பிரிவு ஆழ்ந்த கவலை தெரி­வித்­தி­ருந்­ததாக அமைச்சர் டியோ கூறியுள்ளார்.

கொள்கை மீது கவ­னம் செலுத்­தக்­கூ­டிய இரண்­டா­வது குழு­வுக்கு மார்­சி­லிங்-இயூ டீ குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் திரு­வாட்டி ஹேனி சோ தலைமை ஏற்­பார்.

"நாடா­ளு­மன்­றத்­தில் 24 பெண்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். கேள்­வி­ கள், மசோ­தாக்­கள், விவா­தங்­கள் மூலம் பெண்­க­ளின் பிரச்­சி­னை­களை அவர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் எதி­ரொ­லிக்க முடி­யும்," என்­றார் திரு­வாட்டி டியோ.