எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒரு மரத்தில் மோதியதில் ஆறு பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து கிறிஸ்மஸ் நாளன்று நிகழ்ந்தது.
அந்தப் பேருந்து, முற்பகல் 11 மணியளவில் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் இருந்து ஒரு துணைச்சாலை வழியாக காலாங்- பாய லேபார் விரைவுச்சாலையை நோக்கிச் சென்றபோது மரத்தில் மோதிவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தன் இருக்கையில் சிக்கிக்கொண்டு இருந்த பேருந்து ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காயம் அடைந்த மற்றவர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே, இதுபற்றி தெரிவித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், காயம் அடைந்த ஐந்து பயணிகளுக்கும் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் தான் செய்து வருவதாகக் கூறியது.
இந்த விபத்து குறித்து போலிஸ் புலன்விசாரணை நடப்பதாகவும் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

