பைனியர் ரோடு அருகே கழிவுப்பொருள் நிர்வாக நிலையத்தில் தீ

பைனியர் ரோடு அருகே கழிவுப்பொருள் நிர்வாக நிலையத்தில் தீ

1 mins read

பைனியர் ரோடு அருகே உள்ள கழிவுப்பொருள் நிர்வாக நிலையம் அமைந்துள் தொழிற்கட்டடத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 24) பின்னிரவில் தீப் பிடித்துக் கொண்டது.

அதில் யாருக்கும் காயமில்லை என்று கூறப்பட்டது.

20, ஜாலான் சமுலுன் எனும் முகவரியில் ஏற்பட்ட தீ குறித்து தனக்கு பின்னிரவு 12.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சுமார் 400 சதுர மீட்டர் உயரமும் 6 மீட்டர் உயரமும் கொண்ட கட்டுமான கழிவுக் குவியலில் தீ ஏற்பட்டது.

தீயைக் கட்டுப்படுத்த 40 தீயணைப்பாளர்களுடன் நான்கு அதிவேக நீர்ப் பாய்ச்சி இயந்திரங்கள், ஆளில்லாத தீயணைப்பு இயந்திரம் ஆகியவை அனுப்பப்பட்டன.

'ஃபோம்' கொண்டு பீய்ச்சி கழிவுக் குவியல் மூடப்பட்டது.

-

அதிகாலை 3 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை செல்வதற்குள் வளாத்திலிருந்து மூன்று ஊழியர்கள் வெளியேறிவிட்டனர்.

தீக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 5 குல் லேனில் காற்பந்துத் திடல் பெரிதான தீ மூண்டதை அடுத்து, இந்தத் தீச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.