மகளிர் தினத்தில் சக பெண்களைக் கொண்டாடிய சிங்கப்பூர் பெண்கள்

மகளிர் தினத்தில் சக பெண்களைக் கொண்டாடிய சிங்கப்பூர் பெண்கள்

2 mins read

சமோசாக்களைச் செய்து விற்கும் தாயும் மகளும் தங்களைப் போன்று இல்லத்திலும் சமூகத்திலும் பங்காற்றும் மற்ற பெண்களை, அனைத்துலக மகளிர் தினத்தன்று கொண்டாட விரும்பினார்கள்.

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 4 மணி முதல் மாலை ஆறு மணிவரை முப்பதுக்கும் மேலான பெண்களுக்கு இலவச தேநீர் வழங்கி உபசரித்தார்கள்.

குமாரி நஜிரா ரொஸ்னியும் திருமதி நூருல் அயினியும் 'ஹவுஸ் ஆஃப் கடந்த 2015ஆம் ஆண்டில் வீட்டில் இருந்தபடி சமோசாஸ்' வர்த்தகத்தை தொடங்கினார்கள்.

வாடிக்கையாளர்கள் பெருகவே செயின்ட் ஜார்ஜஸ் சாலையில் கடை திறந்தார்கள்.

தற்போது மெக்பர்சன் சாலையில் நவீன 'கஃபே' நடத்தி வருகின்றனர்.

"எங்கள் குடும்பத்-தில் மூன்று பெண்கள் உள்ளனர். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருந்து, உத்வேகத்தோடு உழைத்தோம்," என்றார் நஜிரா.

பல சவால்களைச் சந்தித்திருந்தாலும் கொவிட்-19 கிருமித்தொற்றினால் தங்களுடைய வியாபாரம் பெருமளவில் சரிந்துபோய்விட இல்லை எனச் சொன்னார் நஜிரா.

பெண்களுக்கு உதவ நிதித்திரட்டும் முயற்சி

பெண்களைக் கொண்டாடுவதோடு அவர்களுக்கு உதவும் வண்ணம் நிதி திரட்டவும் 'காக்டெய்ல்ஸ் ஃபார் அ காஸ்' எனும் திட்டத்தில் ஈடுபட்டார் குமாரி ஆர்த்தி சங்கர்.

ஹாலண்ட் வில்லேஜில் அமைந்துள்ள 'சிமிசாங்கா' (Chimichanga) என்ற மெக்சிக உணவகம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தில் புகழ்பெற்ற பெண்களை வரவழைத்து 'யுனைட்டட் விமன் சிங்கப்பூர்' என்ற மகளிர் அமைப்புக்கு நிதி திரட்ட உதவுகின்றது உணவகம்'.

இவ்வாண்டு தனிப்பட்ட தொழில்களில் சிறந்து விளங்கும் நான்கு பெண்களுக்கு நான்கு வித 'காக்டெய்ல்' பானங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொடுத்தனர் சிமிசாங்காவின் பணியாளர்கள்.

இதன் விற்பனை மூலம் கிடைக்கும் நிதியில் பாதித் தொகை 'யுனைட்டட் விமன் சிங்கப்பூர்' அமைப்புக்கு தரப்படும்.

"மக்கள் கழகத்தில் 10 ஆண்டு காலம் வேலை செய்திருந்தாலும் என்னால் தலைமைத்துவப் பதவியை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற தயக்கம் முதலில் இருந்தது. ஆனால், என்னைப் போன்ற பெண்கள் தொழிலிலும் திறமையிலும் நம்பிக்கை வைக்காவிட்டால் மற்றவர்களும் நம்முடைய திறமைகளில் ஐயம் கொள்வர்," என்று கூறினார் விலங்கு வதைத் தடுப்புச் சங்கத்தின் நிர்வாக இயக்குநராகப் பணிபுரியும் ஆர்த்தி.

இம்மாதம் முழுவதுமாக 'டிக்கி டு யு லவ் மி' என்ற 'காக்டெய்ல்' பானத்தை சிமிசாங்காவில் வாங்கும்போது அதில் கிடைக்கும் பாதி வருமானம் யுனைட்டட் மகளிர் அமைப்புக்குக் கொடுக்கப்படும் என்றும் ஆர்த்தி கூறினார்.

விரிவான செய்திகள் திங்கட்கிழமை மார்ச் 14ஆம் தேதி தமிழ் முரசு அச்சுப் பிரதியில் படிக்கலாம்.