தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மளிகைப் பொருள்கள், காய்கறிகளில் மறைத்து மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் கோழி இறைச்சி 'கடத்தல்'

1 mins read

சிங்கப்பூரர்கள் கோழி இறைச்சியை மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இங்கு கொண்டு வருவதாக சில மலேசிய கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

கோழி இறைச்சியை செய்தித்தாளில் சுற்றி மளிகைப் பொருள்கள் உள்ள பைக்குள் வைத்து அதற்கு மேல் காய்கறிகளைக் கொண்டு மறைப்பது; அதற்குப் பிறகு வாகனத்தினுள் காலுக்குக்கீழ் அந்தப் பையை வைத்து சிங்கப்பூருக்குக் கொண்டு வருவது.

இதைத்தான் சிங்கப்பூரர்கள் செய்வதாக ஜோகூர் கடைக்காரர்கள் சொல்கின்றனர்.

சிங்கப்பூரர்கள் வாரந்தோறும் தங்களிடமிருந்து கோழி இறைச்சியை வாங்கி வருவதாக ஜோகூரில் உள்ள சில்லறை வர்த்தகர்களும் பேரங்காடி ஊழியர்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

இவ்வாண்டு ஜூன் மாதம் மலேசிய கோழி இறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இருந்தாலும்கூட உரிமம் இல்லாமல் சிங்கப்பூருக்குள் கோழி அல்லது மீன் இறைச்சியைக் கொண்டு வருவது சட்டப்படி குற்றம். இதற்கு 2 ஆன்டுகள் சிறை அல்லது $50,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்

-