மீன் பண்ணை ஊழியர் நீரில் மூழ்கி மரணம்

மீன் பண்ணை ஊழியர் நீரில் மூழ்கி மரணம்

1 mins read
Google News Preferred Icon

மீன் பண்ணை ஊழியர் ஒருவரின் சடலம் லிம் சூ காங் நீர்ப்பகுதியில் நேற்று (அக்டோபர் 28) காலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் புதன்கிழமையன்று காணாமல் போயிருந்தார்.

மாண்ட அந்த 50 வயது ஆடவர் மியன்மார் நாட்டவர் என்று அறியப்படுகிறது. நீரில் விழுந்த அவரைக் காணவில்லை என்று போலிசுக்கு புதன்கிழமை பிற்பகல் 12.35 மணிக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, அவரது உடல் நேற்றுக் காலை 7.25 மணிக்கு நீரிலிருந்து மீட்கப்பட்டது. அவரது மரணத்தில் சூது இல்லை என்று தனது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்த போலிசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Watch on YouTube