மோட்டார்சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்குவது என்பது விளையாட்டான விஷயம் அன்று.
ஆனால், அண்மையில் மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த ஒருவர், சாலையில் அமர்ந்த நிலையில் சறுக்கினார். அவர் ஏதோ பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதுபோல இருந்தது.
மழை பெய்துகொண்டிருந்தபோது ஜூரோங்கில் சென்றுகொண்டிருந்தபோது அந்த ஆடவர் அழுத்தமாக 'பிரேக்' அழுத்தியதில், மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து சாலைச் சந்திப்பில் சறுக்கினார்.
நிலவரம் ஆபத்தாக இருந்தபோதும், அந்த ஆடவர் சறுக்கியபோது நிதானத்துடன் காணப்பட்டார்.
ஜூரோங் டவுன் ஹால் சாலை, ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 சாலைச் சந்திப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததுபோல தெரிகிறது. சாலைச் சந்திப்பின் மறுமுனையில் நிறுத்தத்திற்கு வந்த அவர், தலையை ஆட்டியபடி எழுந்து நின்று மோட்டார்சைக்கிளை நோக்கி நடந்தார்.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

