தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகன நிறுத்தக் கட்டணத்தைச் செலுத்த தவறியவருக்கு 'தலையில் கொட்டு விழுந்தது'

1 mins read

வாகன நிறுத்துமிடம் ஒன்றில் மோட்டார்சைக்கிளை நிறுத்தியதற்குக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்குத் 'தலையில் கொட்டு விழுந்தது'.

புளோக் 481 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் திங்கட்கிழமை (அக்டோபர் 4) முற்பகல் 11.15 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. அதில், வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்க, முன்னால் செல்லும் வாகனத்தை அந்த மோட்டார்சைக்கிளோட்டி பின்தொடர்கிறார். எனினும், அவர் செல்லும் வேளையில் தடுப்பு (gantry barrier) ஒன்று கீழிறங்கி அவரது தலையில் அடித்தது.

இந்தக் காணொளியைக் கண்ட பலர், அந்த மோட்டார்சைக்கிளோட்டி செயலை நையாண்டி செய்தனர்.

Watch on YouTube