வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை: நிம்மதிப் பெருமூச்சு விடும் சில ஊழியர்கள்

வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை: நிம்மதிப் பெருமூச்சு விடும் சில ஊழியர்கள்

1 mins read

வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) முதல், வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனால் உள்புறங்களில் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயமாக்கப்படும்.

அலுவலகங்கள், பள்ளிகள், கடைத்தொகுதிகள், பொதுப் போக்குவரத்து, மின்தூக்கிகள் போன்றவை உள்புறங்களாகும். பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், திறந்தவெளி இடங்கள் உள்ளிட்டவை வெளிப்புறங்களாகும்.

இந்நிலையில், வெளிப்புறங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்திற்கு விடப்படும் என்ற அறிவிப்பு, சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவனப்புப் பராமரிப்பு ஊழியர்கள், உணவு விநியோக ஊழியர்கள், கட்டுமான ஊழியர்கள் போன்றோர் அதிக நேரம் வெளியில் பணிபுரிகின்றனர். தற்போதுள்ள வெப்பமான வானிலையில் வெயிலில் முகக்கவசம் அணிந்து பணிபுரிவது இத்தகையோருக்கு சிரமமாக இருந்து வந்துள்ளது. எனவேதான், அண்மைய அறிவிப்பைக் கேள்விப்பட்ட அவர்கள், நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பர்.

-