கியோங் செய்க் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலில் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக செட்டியார் கோவில் குழுமம் தெரிவித்துள்ளது.
அது குறித்து இன்று (பிப்ரவரி 15) அறிக்கை வெளியிடப்பட்டது.
அண்மையில் கோயிலுக்கு வருகையளித்த பக்தர்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தைக் கண்காணிக்குமாறு குழுமம் கேட்டுக்கொண்டது.
உடல்நலம் இல்லாதவர்கள் ஏஆர்டி பரிசோதனை எடுத்துக்கொள்ள குழுமம் அறிவுறுத்தியது.
"கோயிலைச் சுத்தம் செய்யும் பணி நடந்து வருவதாகவும், குறைவான அன்றாடச் சேவைகளோடு ஆலயம் தொடர்ந்து செயல்படுகிறது," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
-

