‘சிங்கப்பூரிலேயே பிறந்தவர்களை வாக்காளர்கள் தங்களின் அதிபராகவும் அதிபர் துணைவியாராகவும் விரும்புவர்’

‘சிங்கப்பூரிலேயே பிறந்தவர்களை வாக்காளர்கள் தங்களின் அதிபராகவும் அதிபர் துணைவியாராகவும் விரும்புவர்’

1 mins read
a0512444-6bb4-47d5-928c-36da43e10ff2
அதிபர் தேர்தல் வேட்பாளர் திரு டான் கின் லியான் தம் மனைவியுடன் கேலாங் சிராய் சந்தைக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் பிறந்தவர்களைத் தங்களின் அதிபராகவும் அதிபர் துணைவியாராகவும் தேர்ந்தெடுக்க சிங்கப்பூரர்கள் விரும்புவர் என்று அதிபர் தேர்தல் வேட்பாளர் டான் கின் லியான் கூறியுள்ளார்.

கேலாங் சிராய் சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கு ஆகஸ்ட் 25 அன்று சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

தம் மனைவி டே சியூ ஹோங் பக்கத்தில் நின்றிருக்க திரு டான், “இவரை நான் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அப்போதுதான் சிங்கப்பூர் மக்கள் தங்களின் ‘ஃபர்ஸ்ட் லேடி’யைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் பெறுவர். மூன்று ‘ஃபர்ஸ்ட் லேடி’கள் இருக்கிறார்கள். என் மனைவி என்னைப் போலவே சிங்கப்பூரில் பிறந்தவர்,” என்று தெரிவித்தார் திரு டான்.

“நிச்சயமாக குடியுரிமை பெறுவதற்காக சிங்கப்பூர் வரும் மற்ற நாட்டவரையும் நாங்கள் மதிக்கிறோம்,” என்றார் அவர்.

இருப்பினும் அதிபரும் அதிபரின் மனைவியும் பிறப்பிலேயே சிங்கப்பூரர்களாக இருப்பதை மக்கள் உள்ளூற விரும்புவார்கள் என்றார் திரு டான்.

ஜிஐசியின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி இங் கொக் சொங்கின் வருங்கால மனைவியும் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் மனைவியும் சிங்கப்பூரில் பிறக்கவில்லை என்பதை மறைமுகமாக திரு டான் குறிப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்