ஒரு விமானப் பயணச்சீட்டு வாங்கினால் இன்னொன்று இலவசம்

சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் ஹாங்காங் செல்ல ஒரு விமானப் பயணச்சீட்டு வாங்கினால் ஒரு பயணச்சீட்டு இலவசமாகக் கிடைக்கும். 
இந்தச் சலுகையைக் குறைந்தது ஆறு சுற்றுப்பயண முகவைகள் வழங்குகின்றன.

இதற்கு முன்பு ஹாங்காங் செல்ல இலவசப் பயணச்சீட்டுகளை கேத்தே பசிபிக் விமானச் சேவை நிறுவனம் வழங்கியிருந்தது. அந்த வாய்ப்பை நழுவவிட்டவர்கள், தற்போது வழங்கப்படும் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தச் சலுகை ஒரு மாதம் நீடிக்கும் அல்லது இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்பனையாகும் வரை நடப்பில் இருக்கும்.

இந்தச் சலுகை மூலம் இலவசப் பயணச்சீட்டு பெறுவோர் அதற்கான விமான நிலைய வரிகள், பயணக் காப்புறுதிக்கான தொகையைச் செலுத்த வேண்டும்.

இந்தச் சிறப்புச் சலுகை வழங்கும் சுற்றுப்பயண முகவைகளில் எஸ்ஏ டுவர்ஸ், நாம் ஹோ டிராவல், சான் பிரதர்ஸ் டிராவல், சிடிசி டிராவல், இயு ஹாலிடேஸ், ஏஎஸ்ஏ ஹாலிடேஸ் ஆகியவை அடங்கும்.

சிறப்புச் சலுகையின்கீழ் 200லிருந்து 300 பயணச்சீட்டுகள் வரை வழங்கப்படும் என்றும் முதலில் வருவோருக்கு முதல் சலுகை அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சில சுற்றுப்பயண முகவைகள் தெரிவித்தன.

சிறப்புச் சலுகை மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளை சுற்றுப்பயணத் தொகுப்புகளுடன் இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 2ஆம் தேதி கேத்தே பசிபிக் வழங்கியிருந்த 12,500 இலவசப் பயணச்சீட்டுகளை ஒரு மணி நேரத்திலேயே வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

அந்தச் சலுகை ஏழு நாள்களுக்கு நடப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலவச பயணச்சீட்டுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டன. பயணச்சீட்டுகளுக்காக பலர் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!