தெங்கா வட்டாரத்தில் உள்ள பிளான்டேஷன் கிரசெண்ட் (Plantation Crescent) குடியிருப்பு புளோக்கில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது.
அமலாக்க நடவடிக்கையின்போது மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர்.
நவம்பர் 7ஆம் தேதி பிளான்டேஷன் கிரசெண்ட் குடியிருப்பு புளோக் கீழ் உள்ள வெற்றிடத்தில் 32 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 1,027 கிராம் கஞ்சாவும் 513 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இருந்தன.
அதன் பின்னர் அந்த புளோக்கில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 44 வயது ஆடவரும் 31 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
அந்த வீட்டில் 3,223 கிராம் கஞ்சா, 7,626 கிராம் போதைமிகு அபின், 2,339 கிராம் ஐஸ் போதைப்பொருள், 2,590 போதை மாத்திரைகள் போன்றவை இருந்தன. மேலும் ரொக்கமாக 9,250 வெள்ளி அவர்களிடம் இருந்தது.
கைது செய்யப்பட்ட 44 வயது ஆடவரின் காரிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 750 கிராம் போதைப்பொருள் இருந்தன.
500 கிராமுக்கு மேல் கஞ்சா அல்லது 250 கிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருள் கடத்தினால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்கிறது.