840,000 வருகையாளர்கள், 1.5 மில்லியன் இரவல்கள்

2 mins read
தேசிய நூலக வாரியத்தின் நடமாடும் நூலகம் வாசிப்பைத் தொடர்ந்து பிரபலமாக்குகிறது
6cff28cd-e68e-4b64-840f-d0292e0a89df
காலாங் சமூக மன்றத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தேசிய நூலக வாரியத்தின் நடமாடும் நூலகப் பேருந்தான மோலியை நோக்கி ஹோங் வென் பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய நூலகத்தின் நடமாடும் நூலகம் (மோலி) 2022 முதல் பொங்கோல் பகுதியில் நிற்பது வழக்கமான காட்சியாக மாறியுள்ளது. ஆனால் அது அங்கு அது அரை நாள் மட்டுமே இருக்கும்.

2008ஆம் ஆண்டு ‘மோலி’ முதன்முதலில் சாலைகளில் நடமாடத் தொடங்கியதிலிருந்து அதை 840,000 பேர் பயன்படுத்தியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில், நடமாட்ட நூலக சேவை கிட்டத்தட்ட 1.56 மில்லியன் புத்தக இரவல்களைப் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும், 116,000க்கும் அதிகமானோர் நூல்களை இரவல் பெற்றனர்.

சிங்கப்பூரில் வசதி குறைந்த சமூகங்களுக்கிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

இவற்றுள் பாலர் பள்ளிகள், சிறப்புக் கல்வி (விரைவு) பள்ளிகள், தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள் ஆகியவையும் அடங்கும்.

மோலி தொடங்கப்பட்டதிலிருந்து, அது மூன்று வாகனங்களாக வளர்ந்துள்ளது. ஒரு பெரிய வாகனம் மற்றும் இரண்டு சிறிய வாகனங்கள் 2014ல் தொடங்கப்பட்டன என்று தேசிய நூலக வாரியப் பொது நூலகங்களின் இயக்குநர் திருமதி டான் சூய் பெங் கூறினார்.

ஏப்ரல் 2014 முதல், மோலி பல்வேறு இடங்களுக்குக் குறைந்தது 8,000 முறை சென்றுள்ளது என்று திருமதி டான் கூறினார். அதில் மூன்று வளாகங்களைக் கொண்ட பாத்லைட் பள்ளிக்குத்தான் மோலி அதிக முறை சென்றுள்ளது.

நிதி உதவி பெறும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட தொடக்கப் பள்ளிகளுக்கும் மோலி அண்மையில் சென்றுள்ளது. மேலும் முதியோர், நூலகங்களை மிகவும் வசதியாகப் பயன்படுத்த உதவும் வகையில் முதியோர் இல்லங்களுக்கும் மோலியின் வருகை விரிவுபடுத்தப்படும் என்று திருமதி டான் கூறினார்.

பெரிய மோலி வாகனம் நாள்தோறும் இரண்டு இடங்களுக்குச் செல்கிறது. அதில் 15 பெரியவர்கள் அல்லது 25 குழந்தைகள் அமர்ந்து படிக்கலாம். ஐந்து சக்கர நாற்காலி பயனாளர்களளுக்கு அங்கு இடமுண்டு. அங்கு 3,000 புத்தகங்கள் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்