செல்வச் சொத்து $1 டிரில்லியன், ஏஐ, 600 புதிய நியமனங்கள்: டிபிஎஸ் திட்டம்

செல்வச் சொத்து $1 டிரில்லியன், ஏஐ, 600 புதிய நியமனங்கள்: டிபிஎஸ் திட்டம்

2 mins read
64887cf0-f1f7-4aa9-bdf6-9f4ff1d96ecb
டிபிஎஸ் வங்கியின் செல்வ நிர்வாகம் மற்றும் பயனீட்டாளர் வங்கியியல் பிரிவின் தலைவர் ஷீ ஸே கூன். - படம்: ராய்ட்டர்ஸ்

டிபிஎஸ் வங்கி தனது செல்வவள வர்த்தகத்தை விரிவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அதிகமான பணியாளர்களை நியமிப்பதன் மூலமும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலமும் ‘ஏயுஎம்’ எனப்படும் நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு 2030ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனை எட்டும் என்று அந்த வங்கி எதிர்பார்க்கிறது.

நிர்வகிக்கப்படும் சொத்துகளின் வளர்ச்சியானது, சில்லறை வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதிகரித்து வரும் வசதிபடைத்த வாடிக்கையாளர்களால் மேம்படும்.

அதேவேளை வசதிபடைத்தோர், அதிகமான நிகரச் சொத்து மதிப்புடையோர், ஆக அதிக நிகரச் சொத்து மதிப்புடையோர் ஆகியோரை உள்ளடக்கிய வங்கியின் செல்வ நிர்வாகப் பிரிவும் அந்த வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்.

நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் $492 பில்லியனைத் தொட்டது.

2027ஆம் ஆண்டில் $500 பில்லியனைக் கடக்க வேண்டும் என வங்கி நிர்ணயித்திருக்கும் இலக்கை அடைய இன்னும் ஓராண்டுக்குமேல் கால அவகாசம் இருக்கும் நிலையில், அந்த இலக்கை முன்கூட்டியே அடைந்துவிடும் அளவுக்கு அதன் வளர்ச்சி உள்ளது.

வங்கி கண்டு வரும் முன்னேற்றம் குறித்து டிபிஎஸ் வங்கியின் செல்வ நிர்வாகம் மற்றும் பயனீட்டாளர் வங்கியியல் பிரிவின் தலைவர் ஷீ ஸே கூன் விளக்கியுள்ளார்.

“வாடிக்கையாளர்கள் தங்கள் செல்வத்தில் அதிகமான பகுதியை வங்கியிடம் ஒப்படைத்து, அதனை முதலீட்டில் ஈடுபடுத்துவதால் வங்கி ஆகச் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது,” என்றார் அவர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சொத்து மதிப்பின் அடிப்படையில் தென்கிழக்கு ஆசியாவின் ஆகப் பெரிய வங்கியாகத் திகழும் டிபிஎஸ், தனது முக்கியமான ஆறு வட்டாரங்களில் 2028ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 600 பேரை பணியில் அமர்த்தத் திட்டமிடுகிறது.

சிங்கப்பூர், சீனா, இந்தியா, இந்தோனீசியா, தைவான், ஹாங்காங் ஆகியன அந்த ஆறு வட்டாரங்கள்.

வாடிக்கையாளர் தொடர்பு மேலாளர்களையும் முதலீட்டு ஆலோசகர்களையும் உள்ளடக்கிய முதல்நிலை ஆலோசகர்களும் நிதி நிர்வாகத் தளப் பொறியாளர்களும் அந்தக் கூடுதல் பணியாளர்களில் அடங்குவர்.

வங்கியின் செல்வப் பிரிவு நிர்வாகத்தை சிறப்புடன் நிர்வகிக்க அவர்களை நியமிக்க அது திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
டிபிஎஸ்வளர்ச்சிதிட்டம்