சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி தொடர்ந்து ஆறாவது மாதமாக உயர்ந்துள்ளது.
மின்னியல் பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் அவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்து வரும் நிலையில், தொழிற்துறையின் இந்த வளர்ச்சி இன்னும் சில மாதங்களுக்காவது தொடரும் என எதிர்பார்க்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொத்த தொழிற்சாலை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 10.6 விழுக்காடு அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அக்டோபர் மாத வளர்ச்சி 1.2 விழுக்காடு என்ற நிலையிலும் திருத்தி அமைக்கப்பட்ட நவம்பர் மாத வளர்ச்சி 10.8 விழுக்காடாக வந்துள்ள நிலையிலும் டிசம்பர் மாத வளர்ச்சி 10.6 விழுக்காடாக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.2 விழுக்காடு இருக்கும் என்ற புளூம்பெர்க் பகுப்பாய்வாளர்களின் கணிப்பை தற்போதைய வளர்ச்சி விகிதம் மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிக ஏற்ற, இறக்கமாக உள்ள உயிர்மருத்துவத் துறையை தவிர்த்துப் பார்த்தால், உற்பத்தி 10.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஜனவரி 24 ஆம் தேதி விளக்கமளித்துள்ளது.