தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அக்டோபர் 23 டோட்டோ குலுக்கலில் $10 மில்லியன் பரிசு

1 mins read
c874f7e5-4a71-4393-8e18-a32ed13f1bea
குரூப் 1 பரிசை வெல்ல ஒரு டிக்கெட்டில் ஆறு வெற்றி எண்களும் இருக்க வேண்டும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடைசியாக நடைபெற்ற மூன்று குலுக்கல்களிலும் முதல் பரிசு வெல்லப்படாததால் அடுத்த டோட்டோ குலுக்கலில் பங்கேற்போருக்கு $10 மில்லியன் மாபெரும் பரிசை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

அந்த டோட்டோ குலுக்கல் அக்டோபர் 23ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.

குரூப் 1 பிரிவிற்கான பரிசு அக்டோபர் 13ஆம் தேதி சுமார் $1.3 மில்லியனில் இருந்து அக்டோபர் 16ஆம் தேதி சுமார் $3 மில்லியனாக உயர்ந்ததாக சிங்கப்பூர் பூல்சின் இணையத் தளம் காட்டுகிறது.

அக்டோபர் 20 அன்று நடைபெற்ற ஆகக் கடைசி குலுக்கலில், குரூப் 1 பரிசுக்கு சுமார் $5.8 மில்லியன் பரிசு என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் யாரும் வெற்றி பெறவில்லை.

குரூப் 1 பரிசை வெல்ல ஒரு டிக்கெட்டில் ஆறு வெற்றி எண்களும் இருக்க வேண்டும். வெற்றியாளர்கள் யாரும் இல்லையென்றால், முதல் பரிசு அடுத்த குலுக்கலுக்கு, அதாவது நான்காவது குலுக்கல் வரை செல்லும்.

நான்காவது குலுக்கலிலும் எவரும் ஆறு வெற்றி எண்களையும் பெறவில்லை என்றால், அந்தத் தொகை குரூப் 2ல் உள்ள வெற்றியாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்