சுவா சூ காங் ஃபுட்சால் திடல்: நம்பகத்தன்மையை ஊக்குவிக்க $100 முன்பணம்

சுவா சூ காங் ஃபுட்சால் திடல்: நம்பகத்தன்மையை ஊக்குவிக்க $100 முன்பணம்

1 mins read
4f6ac74c-dd68-40e5-a0dd-e34965199401
தி அரினா அட் கியட் ஹோங்கில் அமைக்கப்பட்டுள்ள ஃபுட்சால் திடலில் ஒரு மணி நேரம் விளையாட, முன்பணத்தையும் சேர்த்து $130 கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதாக சாவ்பாவ் தகவல் வெளியிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவா சூ காங் வட்டாரத்தில் அமைந்துள்ள தி அரினா அட் கியட் ஹோங்கில் ஃபுட்சால் திடலைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு $130 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக சீனமொழி நாளிதழான சாவ்பாவ் புதன்கிழமை தகவல் வெளியிட்டிருந்தது. திருப்பித்தரப்படும் முன்பணமான $100ம் அதில் அடங்கும்.

குடியிருப்பாளர்கள் அதுகுறித்துக் கவலை தெரிவித்த நிலையில், அந்த முன்பணம் நம்பகத்தன்மையையும் விளையாட்டுத் திடலைப் பொறுப்புடன் பயன்படுத்துவதையும் ஊக்குவிப்பதாக நகர மன்றம் விளக்கம் அளித்துள்ளது. ஃபுட்சால் திடலுக்கான பராமரிப்புச் செலவு அதிகம் என்று அது கூறியது.

புதுப்பிப்புப் பணிகளுக்கு முன்னர் அங்கு இலவசமாக விளையாட முடிந்தது என்பதைக் காற்பந்து ஆர்வலர்கள் சுட்டினர். இருப்பினும் சென்ற ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து அந்த திடலைப் பல்வேறு வயதினர் பயன்படுத்தி வருவதாகவும் அதற்கான முன்பதிவுகள் அதிகரித்திருப்பதாகவும் சுவா சூ காங் நகர மன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்