$100 மில்லியன் எரிபொருள் கொள்ளை: முன்னாள் ஷெல் ஊழியருக்கு 21 ஆண்டு சிறை

$100 மில்லியன் எரிபொருள் கொள்ளை: முன்னாள் ஷெல் ஊழியருக்கு 21 ஆண்டு சிறை

1 mins read
b45fea62-49c9-42d5-ae8c-2aa981fed55c
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரிச்சர்ட் கோ சீ கியோங், 56.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கோம் தீவிலுள்ள பெருநிறுவன எண்ணெய்க் கிடங்கில் நிகழ்ந்த எரிபொருள் கொள்ளையில் முக்கியப் பங்கு வகித்ததற்காக ஷெல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியருக்கு 21 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ $100 மில்லியன் பெறுமான கொள்ளையில் தாம் $1.5 மில்லியன் பெற்றதை ரிச்சர்ட் கோ சீ கியோங், 56, எனப்படும் அந்த மலேசியர் ஒப்புக்கொண்டார்.

அந்தக் கொள்ளை தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட 24 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்தக் குற்றங்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

இதர 26 குற்றச்சாட்டுகள், தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் கொள்ளப்பட்டன.

நம்பிக்கை மோசடிக் குற்றத்திற்காக அவர்மீது சுமத்தப்பட்ட 50 குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச்சாட்டுகள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்ற குற்றங்களுக்குரியவை. நான்கு குற்றச்சாட்டுகள் ஊழல் தொடர்பானவை. போதைப்பொருள் உட்கொண்டதாக ஒரு குற்றச்சாட்டும் கோமீது சுமத்தப்பட்டது.

ஷெல் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டைச் சரிக்கப்பட்ட $1.07 மில்லியன் மதிப்புள்ள தமது சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு அவர் சம்மதித்தார்.

தண்டனை தொடங்கப்படும் காலத்தை தள்ளிவைக்குமாறு கோ விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏப்ரல் 20ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.

கடல்துறை எரிவாயு எண்ணெய்க் கொள்ளைச் சம்பவங்கள் 2014 ஆகஸ்ட் முதல் 2018 ஜனவரி வரை நிகழ்ந்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்