பிடோக்கில் தீ, 100 பேர் வெளியேற்றம்

பிடோக்கில் தீ, 100 பேர் வெளியேற்றம்

1 mins read
877511f8-2995-4fe1-a3be-de76411652c7
புளோக் 541 பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் தீ மூண்டதாக ஜூன் 6ஆம் தேதி இரவு 10.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. - படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

புளோக் 541 பிடோக் நார்த் ஸ்திரீட் 3ன் ஏழாம் மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஜூன் 6ஆம் தேதி தீ மூண்டதை அடுத்து கிட்டத்தட்ட 100 பேர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தீச்சம்பவம் குறித்து இரவு 10.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

பாய லேபார், சாங்கி தீயணைப்பு நிலையங்களிலிருந்து பணியில் ஈடுபட்ட தீயணைப்பாளர்கள் புகை சூழ்ந்திருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாகக் கூறப்பட்டது.

அந்த வீட்டின் படுக்கையறையில் மூண்ட தீ, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கப்பட்டது.

சம்பவம் நடந்தபோது அந்த வீட்டில் யாரும் இல்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தீயினால் படுக்கை அறை முற்றிலும் சேதமடைந்ததாகவும் வீட்டின் மற்ற அறைகளும் வெப்பம், புகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.

காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த புளோக்கிலிருந்த குடியிருப்பாளர்கள் கிட்டத்தட்ட 100 பேரை வெளியேற்றினர்.

தீ மூண்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்