என்யுஎஸ் கல்லூரியின் 400 இடங்களுக்கு 10,000 பேர் விண்ணப்பம்

1 mins read
c018553b-aeed-46a9-b02b-1244737bf4ec
என்யுஎஸ் கல்லூரியின் 400 இடங்களுக்கு 10,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கலைத்துறையில் மாணவர்களுக்கு இன்னமும் ஆர்வம் இருப்பதை இது காட்டுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

என்யுஎஸ் கல்லூரியின் 400 இடங்களுக்கு 10,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. கலைத்துறையில் மாணவர்களுக்கு இன்னமும் ஆர்வம் இருப்பதை இது காட்டுகிறது.

உலகம் செயற்கை நுண்ணறிவை நோக்கி நடைபோடுகிறது. இந்தச் சூழ்நிலையில் கலைத் துறை, அறிவியல் படிப்புகள்மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அப்படியும் ஏராளமான மாணவர்கள் கலைத் துறையில் பட்டம் பெற விரும்புகின்றனர்.

யேல்-என்யுஎஸ் கல்லூரி மற்றும் பல்கலைக் கழக கல்விமான் திட்டத்தின் கட்டமைப்பில் உருவான என்யுஎஸ் கல்லூரிக்கு 2025ஆம் ஆண்டில் 400 இடங்களுக்கு சாதனை அளவாக 10,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

2022ஆம் ஆண்டில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது 7,000 விண்ணப்பங்கள் வந்தன.

வரும் கல்வியாண்டில் முதல் மூன்று பிரிவுகளில் 30 நாடுகளுக்கும் மேற்பட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை விண்ணபங்கள் உள்ளடக்கியிருப்பதாக என்யுஎஸ் கல்லூரியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் இந்தக் கல்வியாண்டில் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட 360 மாணவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் உள்ளூர் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்தவர்கள்.

எஞ்சிய சிங்கப்பூரர்கள், மிலெனியா கல்வி நிலையம், சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, சிங்கப்பூர் கலைப் பள்ளி, என்யுஎஸ் ஹை கணித, அறிவியல் பள்ளி உட்பட்ட தொடக்கக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள்.

மாணவர்கள் பலதரப்பட்ட சமூகப் பொருளியல் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும் கல்லூரி கூறியது.

சிங்கப்பூரர்களில் 40 விழுக்காட்டினர் குடும்ப வருமான அடிப்படையில் கல்வி உதவி நிதி பெறக் கூடியவர்கள் என்று அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்